சசிகலாவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம். ஓபிஎஸ்-இன் அடுத்த அதிரடி

  • IndiaGlitz, [Saturday,February 11 2017]

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து கொண்டு வரும் நிலையில் அதிமுகவை கைப்பற்றுவது, ஆட்சி அமைப்பது மட்டுமின்றி ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை சசிகலாவிடம் இருந்து மீட்டு நினைவு இல்லம் அமைக்க வேண்டும் என்பதும் அவரது கடமைகளில் ஒன்றாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் போயஸ் தோட்ட வேதா இல்லத்தை அம்மா நினைவு இல்லமாக மாற்றும் அரசின் அறிவிப்பு விரைவில் வரும் என்று முதல்வர் ஓபிஎஸ் கூறியிருந்த நிலையில் தற்போது ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற தனது இல்லத்தில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளார். இதில் தற்போது நூற்றுக்கணக்கானோர் கையெழுத்திட்டு வருகின்றனர்.

அதிமுக கட்சி, ஆட்சி அமைக்கும் வாய்ப்பு மட்டுமின்றி போயஸ் தோட்ட இல்லமும் சசிகலா கையை விட்டு அகலும் நிலை வெகுவிரைவில் ஏற்படும் என்று அதிமுக தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

கூவத்தூர் விடுதியில் நடப்பது என்ன? காஞ்சிபுரம் ஏ.டி.எஸ்.பி. தமிழ்செல்வன் பேட்டி

கூவத்தூர் விடுதியில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியதாகவும், சுய விருப்பத்தின் பேரிலேயே விடுதியில் அவர்கள் தங்கியிருந்ததாக தெரிவித்ததாகவும், தங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என அங்கு தங்கியிருந்த எம்.எல்.ஏக்கள் தெரிவித்ததாகவும் காஞ்சிபுரம் ஏ.டி.எஸ்.பி. தமிழ்செல்வன் சற்று முன்னர் பேட்டியளித&#

மாபா பாண்டியராஜனை அடுத்து ஓபிஎஸ் அணியில் மேலும் ஒரு அதிமுக விஐபி

முன்னாள் காவல்துறை அதிகாரியும், மைலாப்பூர் எம்.எல்.ஏவுமான கே.நட்ராஜ் அவர்களும் ஓபிஎஸ் அணிக்கு வரவுள்ளதாகவும், அவர் அனேகமாக இன்று மாலை முதல்வரை சந்தித்து தனது ஆதரவை தெரிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது...

மேலும் ஒரு அதிமுக அமைச்சர் ஓபிஎஸ் அணிக்கு வருகையா?

நேற்று வரை சசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து கொண்டிருந்த அமைச்சர் மாஃபா பாண்டியாராஜன் அவர்கள் தற்போது ஓபிஎஸ் அணிக்கு வர தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது...

முதல்வர் ஓபிஎஸ்-க்கு இரண்டு அதிமுக எம்பிக்கள் ஆதரவு

தமிழக அரசியல் தற்போது முயல்-ஆமை கதை போல சென்று கொண்டிருக்கின்றது. ஆரம்பத்தில் 130 எம்.எல்.ஏக்களும், 37 எம்பிக்களும் சசிகலாவுக்கு ஆதரவு என்றும், முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு வெறும் 3 எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரவு என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வேகமாக முயல் தூங்கியது போலவும், மெதுவாக சென்ற ஆமை வெற்றி பெற்றது போலவும் ஓபிஎஸ் அவர்களின்

சட்டப்பேரவை கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும். கவர்ன்ரை சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் பேட்டி

தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் அவர்களை சற்றுமுன்னர் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருடைய பொறுப்புகளை ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஏற்றுக்கொண்டது...